Saturday, 6 September 2014

Tried to write Review about books..but outcome oh...neengale sollunga...

"தனியாக இருந்து வெறுப்பாகி போச்சு ...(புத்தகம்) நீ வந்ததால என் சோகம் போச்சு "...

ஆமாங்க ..என் லைஃப் ல புக்ஸ்,ஸ்டோரீஸ்,ரைடர் சுஜாதா,Poeter - தபு ஷங்கர் ,சேடன் பாகத்(Chetan Bhagat) ..இவங்கல எல்லாம் அறிமுகம் பண்ணது My Dearest Brother..

நேர்லயானு  வாய   பொலக்க்ரவங்கலுகு  ப்ளாஸ்டெரி(Plastery) வாங்கிதாரேன்..

[My Brother is also an upcoming Writer nga... His blog  - http://muthaliblogs.blogspot.in/ Worthable time for you people to enjoy his wirtings...]

முதல்ல தலைவர் சுஜாதா...

இவரின் கதைகள்,கட்டுரைகள் ,பெரும்பாலும் திகில்,விறுவிறுப்பு ,Humerous Comedy கலந்ததாகவே இருந்தது ..அதிலும் கீழே குறிப்பிட்டுள்ள படித்து முடித்த அனைத்து கதைகளிலும் இவருடைய தனித்துவமான ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது ...

அந்த ஒன்று... இவரின் க்லைம்யாக்ஸ்(Climax) டச்.. "ம் ...முடிவிறுக்கும் ஆனா இருக்காது.."

இதோ இவருடைய பொக்கிஷங்களில் சில - நானும் படித்து முடித்தவலாக பெருமையுடன் குறிப்பிடுகிறேன்..

1. மெரீனா
2. விரும்பி சொன்ன பொய்கள்
3.வானத்தில் ஒரு மௌன தாரிகை
4.விபரீத கோட்பாடு
5.மீண்டும் தூண்டில் கதைகள்
6.ஐய்ன்தாவது அத்தியாயம்
7.காயத்ரி
8.மாயா
9.மேகத்தை தூரத்தினவன்

ரெண்டாவது தபு ஷங்கர்..

நானும் கவிதை எழுதுவேன் என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடித்து கொண்ட காலங்கள் அன்று..இதை கவனித்த என் அண்ணன் .."Do you know about Thabu Shankar " ஆ ..னு கேட்டார் ...அப்படினா என்னனு நா கேட்க..அடுத்த சில நாளில் அவர் (Thabu Shakar) எழுதிய கவிதைகள்,  காவிய  கூறுங்கததைகள்  எனக்கு Flipkart இல் பறந்து  வீடு தேடி வந்தது..

அட ..என்ன ஒரு யதார்த்தம்...
எண்ணமா எழுதி இருக்கார் யா ...கவிதை கவிதை னு ஃபீல் பண்ணேன்..

இதோ இவர் படைப்புகளில் சில..

1.வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் 
2.மழையானவள்
3.விழியீர்ப்பு விசை

மூன்றே புத்தகங்கள் ஆயினும் நம்முள் உறங்கி கொண்டிருக்கும் ஒட்டுமொத்த காதலையும் ,உணர்வுகளையும் சுண்டி எழுப்பியுள்ளார் ...

மொத்தம் 12 புக்ஸ்..ஒரு வழியா 6 மாசமா படிச்சு படிச்சு படிச்சு..முடிசுட்டேன்..

Dedicated and thanks to my Bro (Mr.Abdul Muthalib) http://muthaliblogs.blogspot.in/

Saturday, 7 June 2014

வெற்றியை விட்டு கொடுத்த நண்பன் ...

காதலித்ததால் எழுத தொடங்கினேன் கவிதையை...
காதல் தன் வெற்றியை கவிதைக்கு  விட்டு  கொடுத்து சென்றது...

சின்ன ஆசை

"எண்ணிய காரியமெல்லாம் நிறைவேறும் "
 என்ற சொற்களுக்கு உயிர் கொடுக்க விரும்புகிறேன்...

நீரோடை

கலவை சிந்தனை தலை தூக்க 
கவலை ஏனோ துணை நிற்க 
நீர்குமிழியாய் உள்ளம் கொதிக்க 
எதையோ எண்ணி இவ்வெழுத்துகளும் நகர்கிறது ஒரு நீரோடை போல...

Monday, 24 March 2014

இவள்தானா....

 இவள் தான் என் அடுத்த நான் ..
இவள் தான் என் அடுத்த மறு பாதி
இவள் தான் என் வாழ்த்துணைவி
என்ற எண்ணம் உங்கள் உயிரில் என்று பிரக்கிறதோ
அன்று உங்கள் விருப்பத்தை காதலுடன் தெரிவியுங்கள்  ...

 

சத்தம் இரா பெண்களின் அழுகுரல் ...

பெண்களை தவிட்டு பொருளாக நினைத்து அவளின் உணர்வகளோடு விளையாடும் சபல எண்ணங்கள் ..
இச்சைக்கும் காதலுக்கும் அர்த்தம் அறியா அதி புத்திசாலிகள்
தோழமைக்கு திரோகம் விளைவிக்கும் சில ஆண் பிறவிகள் இவ்வுலகில் உள்ளவரை    ------     நம் பெண்களுக்கு என்றுமே பாதுகாப்பு இராது .. 

சில பல இளைய தலைமுறை ...

சாதிகள் இல்லையடி பாப்பா என்றார் பாரதி அன்று ...
அதை பின்பற்றி வரும் இளைய சமுதயாமோ சில ...
பிர்ப்படுத்தபட்டோரை ஏளனமாக எடை போடும் இளைய தலைமுறையும் பலவே இருக்கத்தான் செய்கிறது ...

Monday, 24 February 2014

தேநீர்,....

தேநீர் 1 :

வயது முதுமையை நோக்கி பயணிக்க
காலம் கடந்த உன் அன்பு துணை நிற்க
தேநீருடன் என் காலை பொழுது உன்னுடன் ..


தேநீர் 2 :

பெரியோருக்கு சுவையில்லா சுடுநீர்
சிறியோர்க்கு சுவையான பதநீர்
நேற்றைய கனவை இன்றைய நனவாக துவக்கும்
ஜில்லென்ற சாரலில் சூடான தேநீர் ....


தேநீர் 3:

பித்த நரையை கொடுத்த பித்த நீரே
என் இனியவளுக்கு பிடித்த சுவை என்பதற்காகவே உன்னை பருகுகிறேன் தேநீறாய்...

Sunday, 16 February 2014

வெற்றி நமதே

"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை"

எழுதிய கவிஞனுக்கு தலை வணங்குகிறேன் ..
எத்தனையோ திறமைசாலிகள் இவ்வுலகில் இருந்தாலும்,வாய்புகள் சிதறி கிடந்தாலும் எவ்வோருவருகும் சிறந்த வாய்ப்பு அமைவதில்லை ..அப்படியே அமைந்தாலும் அதிர்ஷ்டம் துணை நிற்பதில்லை. இவை ஒரு பக்கம் இருக்க ,நம் மனிதர்கள் பற்றியும் குறைத்து மதிபிடுவதிர்கில்லை.வெற்றி கொள்பவனையே இவ்வுலகமும் திரும்பி பார்கிறது .இதை தவறு என்று வாதிட வருவதிற்கில்லை.இது வெற்றிக்கே உரித தனித்துவம் இல்லை கர்வம் என்றே  சொல்லலாம் ...

என்னை பொறுத்தவரை , தோல்வியை கண்டு துயலாத மனமும் ,ஏமாற்றத்தை கண்டு உடையாத குணமும் உடையவர்களே முழுமையான வெற்றியாளர்கள் .. இதை மனதில் தீபமாய் ஏற்றி போரட்ட உணர்வோடு போராடினால் வெற்றி நமதே ...

என் செந்தமிழே ...

பிறங்கு முகத்தில் கிறங்கினேன்
உறங்க நினைத்து மயங்கினேன்
மடியில் தவழ ஏங்கினேன்
ஏங்கி தவித்த என் கயமையே
சொல்லில் முடியாத என் எழுத்து
தவிக்கிறது அடுத்த வார்த்தைக்காக...

Dedicated to ஒரு தலை ராகம் ...

சொல்லி புரிந்த காதல்....
      சொல்லால் பிரிந்த காதல்...
சொல்லாமல் சென்ற காதல்...
      சொல்லில்லா மௌன காதல்...
இவையாவும் இவ்வுலகில் இருக்க
      சொல்லாமல் சொல்லி முறிந்த காதலோ என் காதல் ....

Tuesday, 29 October 2013

என் முதல் தமிழ் ட்வீட் :)

வெற்றியை நோக்கி நடைபோடும் நாட்கள் ,அன்னையின் பிரசவ வலிக்கு ஒப்பானதே - தோல்வியின் நண்பனுக்கு மட்டுமே இவ்வரி சமர்ப்பணம் ! ! !

சக தோழியின் பிறந்தநாள் இன்று !

தாய் உன்னை ஈன்றெடுத்தாள் இந்நாளில்
தலை தூக்கி நடைபோடு இவ்வுலகில்
அஞ்சாதே தடைகளை நீ வெள்வாய்
அம்மை அருள் இருக்கட்டும் எந்நாளும் இத்திருநாளில் - உன் பிறந்தநாளில்