Tuesday, 29 October 2013

என் முதல் தமிழ் ட்வீட் :)

வெற்றியை நோக்கி நடைபோடும் நாட்கள் ,அன்னையின் பிரசவ வலிக்கு ஒப்பானதே - தோல்வியின் நண்பனுக்கு மட்டுமே இவ்வரி சமர்ப்பணம் ! ! !

சக தோழியின் பிறந்தநாள் இன்று !

தாய் உன்னை ஈன்றெடுத்தாள் இந்நாளில்
தலை தூக்கி நடைபோடு இவ்வுலகில்
அஞ்சாதே தடைகளை நீ வெள்வாய்
அம்மை அருள் இருக்கட்டும் எந்நாளும் இத்திருநாளில் - உன் பிறந்தநாளில் 

Tuesday, 24 September 2013

தலைவன் நீயன்றோ ??

அசரீரி ஒலித்தது நீ என் தலைவன் என்று 
ஒலித்தது அசரீரி மட்டுமேயன்றி
ஒளித்தது வெளிச்சம் என் வாழ்வில் அன்றோ ....

காத்திருக்கும் இதயம்

என் உடல் இம்மண்ணில் புதையும் முன்பு
என் உயிர் உன்னை வந்து  சேர்ந்திருக்கும் 
கருவிழி இமை போல என்றும்  பிரியா 
வரம் வேண்டி காத்திருக்கிறேன் 
                                                           உனக்காக  ....

துள்ளும் மனம்

என்னையே நான் நேசித்தேன் ...
நீ என் உயிரில் நுழைந்த நாளன்று ...

Friday, 23 August 2013

காதலை உணர்ந்த காகிதம் ...

திக்கி திக்கி வார்த்தைகள் விழுந்தது உன் முன்னால்
விழுந்த வார்த்தைகளை எடுத்து கோர்த்தேன் கவிதையாய்
எடுத்து விரித்து படித்தேன் என் காதலை....
நீ அறியா  காதலை அறிந்து துடித்தது என் காகிதம்....  

Waiting for you

நீ என்னை தவிர்க்கும் ஒவ்வொரு நிமிடமும்
நான் உன்னை வந்தடைகிறேன் ..
உன் வாழ்கை நான் என்ற எண்ணம் வரும்
நேரம் நோக்கி நடைபோடுகிறேன் என் காதல் வலியுடன்


Feel My Love...

காலங்கள் நகர நகர 
   காத்திருப்பு கூட சுகமானது
காத்திருக்கிறேன் நான் உன் இதயகூட்டில் 
    குடியேறும் நாட்களுக்காக .....

Saturday, 10 August 2013

பெண்ணை பற்றி ஆண் எழுதும் கவிதை

உன் கண் ஒன்று போதுமே என்னை பற்றி பேச...
உன் இதழ் ஒன்று போதுமே என் அன்பை  சொல்ல...
உன் மௌனம் ஒன்று போதுமே என் காதலை உணர..
உன் குரல் ஒன்று போதுமே என் பெயரை இசைக்க...
அடி என்ன பெண்ணே செய்தாய் என்னை ??.
காத்திருக்கிறேன் நான் உன்னோடு சேர்ந்து வாழும் நாட்களுக்காக .....

தந்தை நீயே ...

தியாகத்தின் திருஉருவம் நீயே
வெற்றிக்கு பதை காட்டி
தோல்விக்கு தோள் கொடுத்து
என்றுமே என் முதல் நண்பனாய்
திகழும் என் தந்தைக்கு தலைவணங்குகிறேன்!!!

உலகம் சொல்லும் ஓர் மொழி அம்மா

தாரத்தை நெஞ்சில் கொண்டு 
        தாரத்தின் சிசுவை கருவில் சுமந்து 
பத்து மாதம் வெற்றி நடை போட்டு 
 இவ்வுலகிற்கு புதிய தலைமுறையை படைத்த 
        தேவதையே என் அம்மா !!!

போராளி

உண்மையில் உயர்பவன் உழைப்பாளி !
உழைப்பில் உயர்பவன் போராளி !!!

Tuesday, 6 August 2013

எழும் தோழர்களே !!!

திறமை இருந்தும் இருளால் சூழ்ந்திருக்கும் இளைஞர் கூட்டங்களை நம்மால் கண் கூடாக பார்க்க முடிகிறது ... இவ்வுலகம் நம்மை எப்போது காணப்போகிறது என்று எதிர்பார்த்து காலம் கடந்தது தான் மிச்சம் ..
                        நம் எதை சாதித்தோம் ??? எதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ?? எதை சாதிக்க போகிறோம்?? நமக்குள் இருக்கும் திறமை தான் என்ன??? நம் நாட்டிற்கு என்ன செய்ய போகிறோம் ??? அட முதலில் நம் வீட்டிற்கு என்ன செய்தோம் ?? நம்மை ஏன் இவ்வுலகம் நிராகரிக்கிறது ?? வேலை இல்லா திண்டாட்டம் நம் குற்றமா?? இல்ல இந்த  சமுதாயத்தின் குற்றமா? நம்முள் சிலருக்கு இவ்விதமான கேள்விகள் எழும்...
                   ஆம் நீயும் இக்கேள்விகளின் நாயகனாக இருந்தால் நீ தான் அடுத்த தலைமுறையின் வழிகாட்டி... வேலை இல்லை , நாம் யாருக்குமே ப்ரோயோஜனம் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறிவோம் ..                    "நேர்மை ,உண்மை ,பொறுமை,"இவை மூன்றுமே உன்னை உயர்த்தும்...நீ ஒரு வழிகாட்டி என்பதை மட்டும் மறந்து விடாதே... எழும் தோழா ! நாம் தோல்வியை ஏமாற்றும் நேரம் நெருங்கி விட்டது ... இனி நம் வாழ்கை நம் கையில் என்பதை உணர்வோம் ....
                " வெற்றியையும் ,தோல்வியையும் நம் உயிர் தோழர்களாக எண்ணுவோம் ..பின் அவைகளை என்றுமே விட்டுகொடுக்கமாடோம்" ....
                                                                                                               உங்கள் தோழி 
                                                                                                                சீதா லக்ஷ்மி 

இளைஞனின் துடிப்பு

திறமையை கண்டு வேலை கொடு 
கல்வியின் மதிப்பெண்ணை கொண்டு மதிப்பிடாதே ....
புத்தகத்தில் படித்தவனை விட ...அனுபவத்தில் படித்தவனே ஞானி ஆகிறான் 

Monday, 5 August 2013

கனவின் உயிர் நாடி !

சொக்கி கிடக்கும் சிந்தையில் மந்தையாய் தோன்றும் கனவுகள் 
  கனவுகளுக்கு உயிர்கொடுக்கும் கருவியாய் நானிருந்தால் 
                         நானே கடவுளாயிருப்பேன்  ................

வாழ்வின் தேடல் !

தேடலை நோக்கி நடைபோடு !
         வாழ்வே தேடல் என்பதை உணர்வாய் ...
தோல்வியை கண்டு அஞ்சாதே !
         வாழ்வின் வெற்றிக்கு முதற்படி என்பதை உணர்வாய் ...
ஏமாற்றம் கொண்டு துவளாதே !
         பிறர்க்கு வழிகாட்டி நீ என்பதை உணர்வாய் ...

Sunday, 21 July 2013

PO Nee PO ......

வாழ்வில் உன்னை திரும்பி பார்க்க விருப்பமில்லை 
என்று விரும்பாமல் விளையாடியது என் வார்த்தைகள்  .........

மூடுபனி

உன்னை விட்டு  விலக நினைத்தேன் ..பின்பு 
ஏன் என் மனம் உன்னை தேடி சென்றது ???
நீ விலகி சென்றாய் ..விரும்பி உன்னை தேடினேன் ..
இருக்கும் திசை தெரியாமல் மூடுபனியில் மூழ்கிகிடகிறேன் ...

Leave from my Memories

வரம் வேண்டி தவம் இருப்பார்கள்...
நான் - உன்னை மறக்க வேண்டி தவமிருக்கிறேன் !!!
                                                         - Leave from my Memories

Saturday, 13 July 2013

தொலைபேசி - ட்ரின்க் ட்ரின்க் ....!!!

தொலைவில் இருக்கும் என்னை தொடர்ந்தே பின்வரும் கருவி நீ எனக்கு... 
தொல்லை இல்லா சப்தம் எழுப்பி என்னை விழிதேழுப்பும் கருவி நீ எனக்கு ...
துவண்டு போகும் நேரத்தில் நண்பனாய் துணை வருவாய் நீ எனக்கு ...
என்றுமே வாழ்கையின் மருதுனையாய்  நீயே நீயே  எனக்கு ...ட்ரின்க் ட்ரின்க்!!! 

Wednesday, 26 June 2013

நோ டென்ஷன் பிளஸ்...

உணர்வு , உயிர் , உடல்,வெப்பம் , தாகம்,வேட்கை ,பசி,இன்பம்,துன்பம்,வெறி,வஞ்சம் ,சுயநலம் ,துக்கம் ,துயரம்,வலி,காதல்,பிரிவு ,பணிவு, ......இதற்குமேல் எதிர்பார்காதீங்க இங்க ,சும்மா போர் அடிச்சுதுன்னு என் மேஜை மேல இருக்குற விசைபலகைல அடிச்சுகிட்டு இருந்தேன்... நோ டென்ஷன் பிளஸ்....

நிழல் என்னும் நிஜம்

விரும்பியது கிடைக்காது ,நினைப்பது நடக்காது நம் வாழ்கையில்,
 இவையாவும் சாத்தியமே நம் "கனவில்" .....

ஆசையே அலை போலே....

மனிதனாய் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் ஒரு மாயை ....
உடலை இயக்கும் ஒரு இயந்திரமாய் மட்டுமே விளங்குகிறது ..
ஆசை என்னும் இருளை விளக்கு ... வாழ்கை என்னும் ஒளியை அறிவாய் !!!

Thursday, 18 April 2013

விதி செய்யும் சதி

காதல் கலைகிறதே காற்றென கனவும் தொலைகிறதே ...
பூமியில் செடிகள் எல்லாம் மண்ணாய் விரிகிறதே
இருந்தும் இல்லாமல் நேசிக்க நெஞ்சம் வருகாமல்
பாதையில் மலர்கள் எல்லாம் முள்ளாய் தெரிகிறதே..

உறையும் நிமிடம் ....

காற்றலையாய் நீ என்னை தழுவி செல்ல...
காதலன் உன்னை என் மடியில் ஏந்தி கொள்ள ..
துள்ளுதோ நெஞ்சம் குழந்தைப்போல ....
இப்படியே உறையாதோ இந்நிமிடம்....

Wednesday, 17 April 2013

கவிதை கவிதை....

காதல் வந்துவிட்டால் கவிதை வரும் என்று ,
சொன்னவர்களை பார்த்து சிரித்தேன் அன்று !
ஆனால் இப்போது சிரிக்கிறேன் என்னைப் பார்த்து  !!!! 

Tuesday, 16 April 2013

கனவில் கொண்ட மயக்கம் ..

நம் விழிகள் செல்ல சண்டை போடுதோ !!
மௌனம் மட்டும் சத்தமாய் உரையாடுதோ !
என் பத்து விரல்களும் துடிக்கிதே உன் பத்து விரல்களுடன் சேர்ந்திட !
என் இரு கரங்களும் எழும்புதே  உன் இரு மார்பில் சேர்ந்திட !
தேனில் ஊறிய அமிர்தமாய் என் இதழ்கள் காதுகிடந்திட !
அருகில் நீ வரும்போது கலைந்திடுதே அந்த அற்புத தருணம் ........
                                                                                                              ---என் கனவில் 

விழியின் வெளிச்சம் நீயே ...


இருளில் மூழ்கிய என்னை உன் இமையோடு சிறை பிடித்தாய் ...
காலை பனிப்போல்  என்னை உன் மடியில் உரையச் செய்தாய் ...
கிழக்கில் சூரியன் நீயே,,,
என் வெளிச்சம் தருவாய் நீயே...
வருவாய் நீ என நினைத்தேன்...பின் சென்றாய் என் உயிர் உள்ளே ,...
உலகின் பல மொழி அறியேன் ...ஆனால்
உன் மௌன மொழி மட்டும் என் நெஞ்சில் ...

எங்கே எங்கே போகுது என் இமைகள்...
உன்னை தேடி தேடி தோய்ந்தது கருவிழிகள் ....
சட்டென்று வந்தாய் என் முன்னால் , பின்பு
பட்டென்று அடைந்தது என் நெஞ்சம் ...
வார்த்தைகள் துள்ளுதே என் நாவடியில் ...
என்னென்று பார்த்தால் நான் உன் மடியில்...

நன்று.....

காட்டிய  பாதைக்கு நன்று ...
என் உயிர் காதலுக்கு வழி கொடுத்து மறைந்ததற்கு நன்று ...
உன் சிறையின் கைதியாய் இருந்த என் உணர்வை
விடுதலை செய்தமைக்கு நன்று ....
வலி பட்ட என் உணர்வை உன் வஞ்சம் புகுத்து ஆற்றுகிறேன் ....
நன்று ..... நன்று.....  நன்று ......

கானல் நீர் ......

வாழ்கையில் கானல் நீராய் இருந்த நீ  
ஏன் என்னை கண்ணீரில் உறைய வைத்தாய் ....

கடல் அலை .......

புயலடித்து ஒய்ந்த என் உயிரில் ....
      புது பாதையாய் பதிந்தாய் ......
பதித்த உன் கால் தடங்கள் நெஞ்சில் பதியும் முன்பு 
      கடற்கரை மண்ணில் பதித்தாய்  ....
கடந்த நினைவுகள் அலை போல் எழும்பி 
      என்னை ஆழ்கடலில் மூழ்கடிக்க ..
மறக்க நினைக்கும் என் நெஞ்சம் 
     இன்னும் நீச்சல் தெரியாமல் தத்தளிக்கின்றது 
அவை என்று கரையை கடகின்றதோ 
    அந்த நாளை நோக்கி என் பயணமும் நகர.....

Wednesday, 13 February 2013

Feel My Love !!!

நெஞ்சில் நிலவொளியாய் நீ ஒலி கொடுத்திட !
வாழ்வில் வானவில்லாய் நீ நிறம் கொடுத்திட !
காதலை மட்டும் ஏன் என்னிடம் கொடுக்க  மறுக்கிறாய் .....


                                                                      

Feel of Love!!!

வானில் எழுமே வெண்ணிலவாய் உன் முகம் ,
தோன்றுதே என் காதல் உன்னிடம் .......
காற்றுடன் காற்றை என்னுள் வந்தாயோஎன்னுள்
கலந்து என் உயிரை உருவேடுதாயோ !!!!

T.R Style Rhyming....

அன்பே என் சேமியா !
எங்கே என் மாமியா !
வாடி என் பக்கம் !
எங்கே உன் வெட்கம் ?
ஒன்று தருகிறேன் என்று அழைத்தாயே ,
வந்து நிற்கிறேன் இங்கு பார்த்தாயா??
காலமில்லை காத்திருக்க !
தந்தாயே முகம் வேர்த்திருக்க !!!
அல்வா !!! -தீபாவளி பலகாரம்  :) :) :)
                                          ------Seetha(me)